#BREAKING: குடியுரிமை சட்டம்., கொரோனா விதிமீறல் உட்பட அனைத்து வழக்குகளும் ரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள உதவிகளை பட்டியலிட்டு பேசினார். அப்போது, குடியுரிமை சட்டம் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பொதுமக்கள் மீதான தொடரப்பட்ட வழக்குகளும் கைவிடப்படுத்தாக தெரிவித்துள்ளார்.

கொரோனா விதிகளை மீறியதாக தொடரப்பட்ட தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதில் இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகள் தொடரும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். இதுபோன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலினை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்