#BREAKING : செஸ் ஒலிம்பியாட் – 2 இந்திய செஸ் அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு..! – முதல்வர்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஏ அணிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,  44-வது
சர்வதேச ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில் பொதுப் பிரிவில் ‘இந்திய பி அணியும்’ பெண்கள் பிரிவில் ‘இந்திய ஏ அணியும்’ என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய பி அணிக்கும்’, பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி (பெண்கள்)’ ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment