#BREAKING: ஜனவரி 9ல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு!

ஜனவரி 9ல் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.

வங்கக்கடலில் ஜனவரி 9-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜனவரி 9ல் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

அதன்படி, ஜனவரி 9-ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுபோன்று, ஜனவரி 10-ஆம் தேதி சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், 10ம் தேதி கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் மலை பெய்யக்கூடும் என்றும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் பனிமூட்டத்துடன் கூடிய வானிலை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்