#BREAKING: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு! – அமைச்சர் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் என அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு.

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 2022 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், டெல்லி, மும்பை, அகமதாபாத் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். PMGKAY (இலவச ரேஷன்) திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது எனவும் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment