#BREAKING: CBSE +2 பொதுத்தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு -மத்திய அரசு ..!

CBSE +2 பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு அனைத்தும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்..? என்ற ஒரு கேள்வியை நீதிபதிகள் எழுப்பினார்.

அதற்கு, அடுத்த இரண்டு நாட்களில் இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுத்து விடுவோம் எனக் கூறி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுங்கள் ஆனால் அவை  கொள்கை முடிவாக இருக்க வேண்டும் என தெரிவித்து  வழக்கை வரும் வியாழக்கிழமை ஒத்திவைத்தனர்.

author avatar
murugan