#BREAKING: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான வழக்கு..! நாளை தீர்ப்பளிக்கறது உச்சநீதிமன்றம்..!

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி  உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இந்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாடுகளின் உரிமையாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கலாம் என்ன்று தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது.

இதன்பின், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கலாம் என்ற தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குழு விசாரித்தது.

இதன் விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதலுடன் இயற்றப்பட்டதை எடுத்துக்கூறியதோடு, காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதை என பல்வேறு வாதங்கள் விரிவாக முன்வைக்கப்பட்டது.

இதன்பின், ஜல்லிக்கட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

Jallikattu Report
Jallikattu Report Image Source Twittercinnattampi
author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.