#BREAKING: ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் – முதல்வர் அறிவிப்பு

ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்த நிலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் ஆந்திர முதல்வர். 

ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் என அறிவித்தார் ஆந்திர மாநில முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி. ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்த நிலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்.  விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகபட்டினத்துக்கு மாற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஆந்திராவில் 3 தலைநகர்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில்,  விசாகப்பட்டினம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment