#BREAKING: அமைச்சரவையில் மாற்றமா? ஆளுநரை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஆளுநர் மாளிகை செல்கிறார் துரைமுருகன். 

தமிழக நீர்வளத்துறை துரைமுருகன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை செல்கிறார். திமுக அமைச்சரவையில்மாற்றங்கள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க உள்ளார் அமைச்சர் துரைமுருகன். அப்போது,  தமிழக அரசின் அமைச்சரவை மாற்றம் குறித்த பேச போகிறார்களா? அல்லாது வேறு எதாவது குறித்து பேச உள்ளார்களா? என்பது குறித்து விவரம் வெளியாகவில்லை.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்