#BREAKING: தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கையின்போது போதும், தேர்தல் முடிவுக்கு பின்னரும் வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றியை கொண்டாட தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, வாக்கு எண்ணிக்கையின்போதும், தேர்தல் முடிவுக்கு பின்னரும் வெற்றி கொணடங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவ தேர்தல் ஆணையமே காரணம் என உயர்நீதிமன்றம் குற்றசாட்டிய நிலையில், தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்