#BREAKING: 80 வயதானவர்களிடம் ஏப்ரல் 5 வரை தபால் ஓட்டு பெறப்படும்..!

ஜி-பே மூலம் பணபட்டுவாடா தொடர்பான தெளிவான புகாரை யாரும்  அளிக்கவில்லை என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

80 வயதானோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ஏப்ரல் 5-ம் தேதி வரை  தபால் வாக்கு பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் செலுத்த மொத்தம் 3,46,519 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு அதில், இதுவரை 1,32,350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு 12 டி விண்ணப்பங்கள் 92,559 தரப்பட்டுள்ளன. புதிய வாக்காளர்களுக்கு விரைவு தபால் மூலம் வாக்காளர் அட்டை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஜி-பே மூலம் பணபட்டுவாடா தொடர்பான தெளிவான புகாரை யாரும்  அளிக்கவில்லை. எத்தனை பேருக்கு எவ்வளவு தொகையை அனுப்பப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிட்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

author avatar
murugan