#BREAKING : சட்டப்பேரவையில் தொழிற்கல்வி படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்…!

#BREAKING : சட்டப்பேரவையில் தொழிற்கல்வி படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்…!

சட்டப்பேரவையில் தொழிற்கல்வி படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.

கடந்த 4-ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவெடுத்த நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே இதுதொடர்பான தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று காலை சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு தரும் மசோதா பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.  இந்த மசோதாப்படி, அரசுப்பள்ளியில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருந்தார்கள் என்றால், அவர்களது 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் சட்ட படிப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube