#BREAKING: தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய முதலீடு – மத்திய அரசு

#BREAKING: தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய முதலீடு – மத்திய அரசு

தொலைத் தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதிய முறைப்படி துறை ரீதியான ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் நேரடியாக முதலீடு செய்யும் வகையில் வழிமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.  அதன்படி, தொலைத் தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் புதிய முறைப்படி, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், டெலிகாமில் 100% அந்நிய நேரடி முதலீட்டை (Foreign Direct Investment) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொலைத் தொடர்பு பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைப்பதற்கான செலவுகளை குறைக்க மத்திய அரசு வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இருப்பினும், 100 சதவீத தொலைத்தொடர்பு துறையில் (automatic route), சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு பொருந்தாது என்றும் கூறினார். ஏற்கனவே, டெலிகாமில் 49% முதலீடு அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 100% அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பித்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube