#Breaking:தொடங்கியது போர்…உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் ரஷ்யா!

#Breaking:தொடங்கியது போர்…உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் ரஷ்யா!

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைன் டோனட்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க ரஷ்யா, அந்நாட்டின் மீது போர் தொடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இதற்கிடையில்,ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைன் டோனட்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக தகவல்கள் வெளிவருகின்றன.இதற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதற்கிடையில்,உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது.

Join our channel google news Youtube