பிரேசிலில்,உலகின் மூன்றாவது பெரிய இயேசு சிலை…!

பிரேசிலில்,உலகின் மூன்றாவது பெரிய இயேசு சிலை…!

பிரேசில் ,உலகின் மூன்றாவது பெரிய இயேசு சிலையை அதன் என்கான்டாடு நகரில் கட்டி வருகிறது.

பிரேசில் நாடானது,’க்றிஸ் தி ப்ரொடக்டர்’ என்ற பெயரில் 141 அடி உயரத்தில் ஒரு பிரமாண்டமான இயேசு சிலை அதன் என்கான்டாடு நகரில் கட்டி வருகிறது.இந்த சிலையானது பிரேசிலின், ரியோடி ஜெனிரோ நகரில் உள்ள 98 அடி உயர ‘ரிடீமிர்’ இயேசு சிலையைக் காட்டிலும் உயரமான அளவில் கட்டப்படுகிறது.2 கோடியே 60 லட்சத்தில் உருவாகும் இந்த சிலைக்கு ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட சிலையின் பணிகளில் தற்போது கை மற்றும் கால்கள் இணைக்கப்பட்டுள்ளன.மேலும்,இயேசு சிலையின் உட்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் மூலம் பார்வையாளர்கள் மேலே சென்று,சிலையின் இதயத்தின் வழியே வெளியேறி 132 அடி உயரத்தில் இயற்கையை ரசிக்கும் வண்ணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து,சிலையை கட்டி வரும் ‘தி அசோசியேஷன் ஆஃப் ப்ரண்ட்ஸ் ஆப் கிறிஸ்’ என்ற நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் சிலை திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

உலகின் முதல் உயரமான இயேசு சிலையானது இந்தோனேசியாவின் சுலவேசி பகுதியில் உள்ளது.இதன் உயரம் 52.55 மீட்டர் ஆகும்.

இரண்டாவது உயரமான சிலை போலந்து நாட்டில் 52.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. அதன் வரிசையில் தற்போது மூன்றாவது உயரமான இயேசு சிலையாக பிரேசிலில் கட்டப்பட்டு வரும் க்றிஸ் தி ப்ரொடக்டர் சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube