"எம் எஸ் தோனி நம்பர் 7" .... தல தோனியின் பிறந்த நாளுக்கு பரிசளித்த பிராவோ..!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பிறந்த நாளை முன்னிட்டு வெஸ்ட் இண்டீஸின்

By bala | Published: Jul 07, 2020 12:32 PM

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பிறந்த நாளை முன்னிட்டு வெஸ்ட் இண்டீஸின் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ ‘ஹெலிகாப்ட்டர் பாடல்' ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தோனி தான் அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லியேயே தெரியவேண்டாம் மேலும் தோனி கடைசியாக 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடினார், ஐபிஎல் போட்டிக்காக காத்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவருக்கு இன்று 39 வது பிறந்த நாள் இதனை அவரது ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் தோனிக்கு பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸின் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ, தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் வகையில் ‘ஹெலிகாப்ட்டர் பாடல்' ஒன்றை தனது யூடுப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பாடலில் தோனி சாதனைகள் குறித்தும், தோனியின் பண்பு குறித்தும் பாடல் முழுக்கப் புகழ்ந்துள்ளார் அந்த பாடல் சமூக வலைதளலத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பாடல்.

Step2: Place in ads Display sections

unicc