மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் – காவல்துறை வழக்குப்பதிவு..!

கோவையி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுவனின் உயிர் பறி போனதால் இதுதொடர்பாக சட்டப்பிரிவு 304A-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த தொண்டாமுத்தூர் சாலையில் தக்ஷ  நிறுவனத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்புக்குள் சிறுவர்கள் விளையாடகூடிய விளையாட்டு பூங்கா ஒன்று உள்ளது. இதில் நேற்று 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பூங்காவில் உள்ள மின் விளக்குகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பணியாற்றும் பூங்கா பராமரிப்பாளர் மின்சார ஓயரை வெளியே எடுத்துவிட்டு அதனை பூமிக்கடியில் பதிக்காமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து மாலை வேளையில் விளையாட வந்த லக்சன் என்ற 9 வயது சிறுவன்,  சிறுவன் ஒயரின் மீது விழுந்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுவனின் உயிர் பறி போனதால் இதுதொடர்பாக சட்டப்பிரிவு 304A-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தோட்டக்காரர், எலக்ட்ரீசியன், அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.