தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.!

ஜூன் 1 முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடகியுள்ளது

By balakaliyamoorthy | Published: May 30, 2020 04:36 PM

ஜூன் 1 முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடகியுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கொரோனா வைரசால் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கூடுதலாக ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முன்னதாக ரயில்வே அறிவித்த, 200 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. 

அந்த கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் கோவை-காட்பாடி, கோவை-மயிலாடுதுறை, மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் அந்த தடத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜூன் 1 முதல் இயக்கப்படும் 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc