38 C
Chennai
Sunday, June 4, 2023

அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் படைத்த வினோத சாதனை.!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங், விக்கெட்...

புதுச்சேரியில் வெயில் அதிகரிக்கும்…மிதமான மழை பெய்யும்…சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!!

புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வெப்ப...

ஒடிசாவில் இருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை..முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவு.!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு மூன்று...

டெல்லி அமிர்தா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..! வெடிகுண்டு செயலிழப்புக் குழு சோதனை..!

தெற்கு டெல்லியில் உள்ள அமிர்தா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு டெல்லியின் புஷ்ப் விஹாரில் உள்ள அமிர்தா பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இன்று அதிகாலை 6:33 மணிக்கு மின்னஞ்சல் வந்ததாக கூறப்படுகிறது.

இதன்பின் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் அறிந்து வந்த டெல்லி போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழு சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். ஒரு மாதத்தில் டெல்லியில் உள்ள பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது இது இரண்டாவது முறையாகும்.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து கருத்து தெரிவித்த தெற்கு டெல்லி காவல் ஆய்வாளர் சந்தன் சவுத்ரி, வெடிகுண்டு செயலிழப்பு குழு (BDT) பள்ளியை முழுமையாக சோதனை செய்தது. ஆனால், வெடிகுண்டு மற்றும் வெடி மருந்து பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று உறுதிப்படுத்தினார்.