நடிகர் சூர்யாவின் சென்னை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் சூர்யாவின் சென்னை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் சூர்யாவின் சென்னை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

தமிழ் திரையுலகின் மிக பிரபலமான நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் சூர்யாவிற்கு பல்வேறு மாவட்டங்களிலும் நடிகர் சங்கங்கள் மற்றும் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரக்கூடிய சூர்யாவின் அலுவலகத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்கள் போன் செய்து மிரட்டியுள்ளனர்.

இந்த மிரட்டலை அடுத்து மோப்ப நாயுடன் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே இது வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு இருப்பதாக கூறியது யார் என தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest Posts

#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..!
#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!