தளபதி விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்.!

தளபதி விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி ஏற்பட்ட

By ragi | Published: Jul 05, 2020 12:12 PM

தளபதி விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி ஏற்பட்ட வதந்தியால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் செய்த செயல் என்றும், அது வதந்தி என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் அவர்களின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சாலிகிராமத்தில் நடிகர் விஜய்க்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. ஆனால் விஜய் தற்போது குடும்பத்துடன் பனையூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் நேற்றைய தினம் காவல்துறை கட்டுபாட்டு மையத்திற்கு கால் செய்து சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். அதனையடுத்து உடனடியாக விஜய்யின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்திய போது வதந்தி என்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மர்மநபர் குறித்த விசாரணை நடத்திய போது, விழுப்புரத்தை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தான் இந்த செயலை செய்ததாக கண்டறியப்பட்டது.

Step2: Place in ads Display sections

unicc