ஆபாச புகைப்பட குழு.! போய்ஸ் லாக்கர் ரூம்! போலீசிடம் வசமாக சிக்கிய +2 மாணவன்.!

பல சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டு வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட போய்ஸ் லாக்கர் ரூம் (Bois Locker room)  இன்ஸ்டாகிராம் சேட் குரூப் அட்மின் டெல்லி போலீசால் கைது செய்யபட்டான்.

டெல்லி சைபர் கிரைம் போலீசார் நேற்று போயிஸ் லாக்கர் ரூம் (Bois Locker room)  இன்ஸ்டாகிராம் சேட் குழு அட்மினை கைது செய்தனர். அந்த குழுவில் பல சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டு வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  இன்ஸ்டா குழு அட்மினிற்கு 18 வயதுதான் ஆகிறது எனவும், இந்த ஆண்டு நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வினை எழுதியவன் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஹரிஷ் கான் கூறுகையில், ‘ சம்பந்தப்பட்ட இன்ஸ்ட்டா குழுவில் 20 இளைஞர்கள் இருந்தனர். அந்த குரூப்பில் பல பெண்களின் ஆபாச போட்டோக்களை ஸ்க்ரீன் சாட் எடுத்து அதனை தனக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் அனுப்புவார்கள்’ என அவர் தெரிவித்தார். 

மேலும் ஹரிஷ் கூறுகையில், ‘ போட்டோக்களை பகிர்ந்த இளைஞன் என் நண்பன். எனவே, அந்த குரூப்பில் என்ன நடக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட இளம்பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் தெரிவிக்க முயற்சி செய்ய நினைத்தேன். அதனால், இன்ஸ்டாகிராமில் இதற்கென ஒரு குழுவை உருவாக்கி அதில் பாதிக்கப்பட்ட பெண்களை அவரவர்களின் இன்ஸ்டா ஐடி மூலம் குரூப்பில் இணைத்தேன். அந்த குரூபில் 10 சிறுமிகளை சேர்க்க முடிந்தது. ஆனால், அவர்களில் சிலர் பயந்தார்கள்.’ என்று ஹரிஷ் கூறினார்.

‘அந்த இளைஞர்கள் குழுவின் மூலம் 100-க்கும் மேற்பட்ட ஆபாச செய்திகளும் பல பெண்களின் புகைப்படங்களும் கிடைத்தன.’ என்றும் அவர் கூறினார். மேலும், ‘ அந்த குழுவில் உள்ள சிறுவர்கள் ஒருவருக்கொருவர் பழக்கமில்லாதவர்கள். அவர்கள் அனைவரும் வயது குறைவானவர்களாக இருந்தனர்.’ எனவும் தெரிவித்தார்.

மேலும், ‘பெண்களுக்காக அமைக்கப்பட்ட குழுவில் எந்த ஒரு தவறான கருத்தும் பகிர்ந்தது கிடையாது எனவும், அனைவரும் தங்கள் கசப்பான அனுபவங்களை குரூப்பில் பகிர்ந்து கொள்கிறார்கள். அது மற்ற பெண்களின் ஆதரவைவும் அவர்களுக்கு விழிப்புணர்வாகவும் இருந்தது’ எனவும் அந்த நபர் தெரிவித்தார். 

ஹரிஷ் மேலும் கூறுகையில், தனது வேலை முடிந்தவுடன் குழுவிலிருந்து வெளியேறியதாக குறிப்பிட்டார். ஆனால், போலிஸ் புகாரில் தனது பெயர் எப்படி பதிவு செய்யப்பட்டது என தனக்கு தெரியாது’ என்றும் குறிப்பிட்டார். 

கடந்த திங்களன்று, அந்த இன்ஸ்டா குழு உறுப்பினராக இருந்த ஒரு சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் குழுவில் இருந்த சிறுபான்மையினர் உட்பட பத்து உறுப்பினர்கள் டெல்லி போலீசால் அடையாளம் காணப்பட்டுள்ளனராம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.