360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு பயணியுடன் பறந்த போயிங் விமானம்…!

360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு பயணியுடன் பறந்த போயிங் விமானம்…!

மே-19 ஆம் தேதி மும்பையில் இருந்து துபாய்க்கு 360 இருக்கைகள் கொண்ட போயிங் 777 ரக விமானத்தில், பாவேஸ் ஜாவேரி (40) என்ற ஒருவர் மட்டும் பயணித்துள்ளார்.

மே-19 ஆம் தேதி மும்பையில் இருந்து துபாய்க்கு 360 இருக்கைகள் கொண்ட போயிங் 777 ரக விமானம் ஒன்று ஒற்றை பயணியுடன் பயணித்துள்ளது. அந்த விமானத்தில் பாவேஸ் ஜாவேரி (40) என்ற ஒருவர் பயணித்துள்ளா.ர் இவர் இந்த விமானத்தில் பயணம் செய்ய பயணம் கட்டணமாக 18 ஆயிரம் மட்டுமே செலுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக துபாயில் சில பயண கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி துபாயை சேர்ந்தவர்கள் அல்லது அந்நாட்டின் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரமுடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மே 19-ஆம் தேதியன்று பல பயணிகளுக்கு துபாய்க்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,  பாவேஸ் ஜாவேரி என்ற பயணிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு காரணம் என்னவென்றால், துபாயை பொறுத்தவரையில் தனது நாட்டின் சிறந்த முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாக கூடிய கௌரவ கோல்டன் விசாக்கள் வழங்கப்படுகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கவுரவமாக நடத்தப்படுகின்றனர். பாவேஸ் இந்த கோல்டன் விசா வைத்துள்ளதால் அவருக்கு பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube