கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் எரிப்பு – பாகிஸ்தான் பிரதமர் கண்டனத்திற்கு பணிந்த இலங்கை!

கொரோனாவால் உயிரிழந்த சிறுபான்மையினர்களையும் அவர்களின் மத சடங்கு எதிராக எரிக்கும் இலங்கை அரசை பாகிஸ்தான் பிரதமர் கண்டித்ததை அடுத்து தங்கள் முடிவை இலங்கை அரசு மாற்றிக்கொண்டுள்ளது.

பொதுவாக இந்துக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் மதத்தினர் எரிக்காமல் புதைப்பது தான் அவர்களின் மத வழக்கம். ஆனால் கொரோனவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மண்ணுக்குள் புதைப்பதால் அது நிலத்தடி நீரில் கலந்து தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் சிலர் கூறியதை அடுத்து இலங்கையில் கொரோனவால் உயிரிழக்கும் அனைவரையுமே எரிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுபான்மையினராகிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மத வழக்கத்திற்கு இது எதிரானதாக இருப்பதாக பல வகையில் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும், இதற்கு ஐநா மனித உரிமை ஆணையமும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து இலங்கைக்கு சுற்றுப் பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள், இதுகுறித்து இலங்கை அரசிடம் பேசி உள்ளார். அப்பொழுது சிறுபான்மை மக்களின் மத நம்பிக்கைகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் எனவும், சடலம் எரிக்கப்படுவது இஸ்லாம் மதம் ஏற்கவில்லை எனவும் இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக பின்பற்றி வந்த தங்களின் நடைமுறையை மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பான சட்டத்தையும் தற்பொழுது மாற்றியுள்ளது.

author avatar
Rebekal