30 C
Chennai
Friday, October 22, 2021

நாளை அறிமுகமாகும் பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி மேக்சி-ஸ்கூட்டர் – விலை எவ்வளவு தெரியுமா?…!

பிஎம்டபிள்யூவின் சி 400 ஜிடி மேக்சி-ஸ்கூட்டர் இந்தியா வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது.

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ அதன் சி 400 ஜிடி மேக்சி-ஸ்கூட்டர் (C400GT) வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.அதன்படி, சி 400 ஜிடி பிரீமியம் மேக்சி-ஸ்கூட்டர் அக்டோபர் 12 ஆம் தேதியான நாளை இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தனது சமூக ஊடக சேனல்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

சி 400 ஜிடி ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படும் போது, இந்திய சந்தையில் மிகவும் பிரீமியம் ஸ்கூட்டராக வெளிவரும்.ஏனெனில்,அதன் ஆரம்ப விலை ரூ.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.நிறுவனம் ஏற்கனவே ரூ. 1 லட்சம் டோக்கன்(முன்பணம்) தொகைக்கு மேக்ஸி-ஸ்கூட்டரின் முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது.

சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மற்றும் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 போலல்லாமல்,சி 400 ஜிடி மிகவும் தனித்துவமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.சி 400 ஜிடியில் ஒரு உயரமான விண்ட்ஸ்கிரீன்(windscreen), இழுக்கப்பட்ட(pulled-back) பின்புற ஹேண்டில்பார், ஒரு பெரிய இருக்கை, இரட்டை ஃபுட்ரெஸ்ட்(footrest)  மற்றும்  அதன் முக்கிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பயண அம்சங்களில் முழு எல்.ஈ.டி விளக்கு,சாவி இல்லாத பற்றவைப்பு(keyless ignition), சூடான பிடிகள்( heated grips,), சூடான இருக்கை, ஏபிஎஸ், திருட்டு எதிர்ப்பு அலாரம் அமைப்பு மற்றும் ப்ளூடூத்-இயக்கப்பட்ட கருவி கிளஸ்டர் ஆகியவை அடங்கும்.

மேலும்,இதில் 350 சிசி, ஒற்றை சிலிண்டர் மற்றும் திரவ-குளிரூட்டப்பட்ட இயந்திரம் உள்ளது. இது சிவிடி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 33.5 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.இதனால்,இது இந்திய சந்தையில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

spot_imgspot_img

Hot Topics

Read More