தினகரன் அணி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்!-அரசு கொறடா பரிந்துரை!!!

கட்சிக்கு விரோதமாக 19 அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டுள்ளனர் என அரசு கொறடா ராஜேந்திரன் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 19 எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க பரிந்துரைத்து சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக ஆளுநரிடம் 19 பேரும் மனு கொடுத்தது தவறு என்றும் அவர் கூறியுள்ளார். தம்மிடம் தகவல் தெரிவிக்காமல் ஆளுநரிடம் மனு கொடுத்தது கட்சி விரோதம் என அவர் கூறியுள்ளார். 

Leave a Comment