மிரட்டப்பட்டரா..? மெர்சல் விஜய்,தயாரிப்பாளர்,இயக்குனர்…ஆதரவாக குதித்த அரசியல்வாதிகள்,அஜீத் ரசிகர்கள்…!

மெர்சல் திரைப்படத்தின் வசனங்களுக்கும் நடிகர் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் கூரான வசங்களை தெளிவாக பிரிதிபலித்ததில் விஜய்க்கு பங்கு உண்டு.. அந்த வசனங்கள் அதிகார வர்க்கத்தின் அலட்சிய அரசியலை தெளிவாக எடுத்துரைக்கிறது.

அரசியல் எதிர்ப்பும் ஆதரவும்;
சுதந்திர நாட்டில் எல்லாருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு, அதன் அடிப்படையில் கருத்து தெரிவித்த படத்தின் மீது மிரட்டல் விடுத்த மத்திய அரசின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மிரட்டுவதும், அதன் தேசிய செயலாளர் H.ராஜா நடிகர் மீது மதசாயம் பூசுவதும், அதன் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய அரசின் தோல்வி அடைந்த GST தொடர்பான கருத்துக்களை நீக்க வேண்டும் என மிரட்டுவதும் அரசியல் ரீதியில் அவர்கள் கருத்தின் மீது போரத்தோடுப்பதும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பானது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிஜேபியின் இந்த மிரட்டலை கண்டித்து அறிக்கை வெளியிட்டது,விசிக தலைவர் தோல்.திருமாவளவன் ,சீமான்,வைகோ போன்ற அரசியல் பிரபலங்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்த நிலையில்…….

மெர்சல் படத்தின் தயாரிப்பு தரப்பில் வசனங்களை நீக்க முடிவு செய்திருக்கிறார்கள் என செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் தற்போது மெர்சல் படத்திற்கு அனுமதிஅளித்த அதிகாரிகள் பதவிவிலகவேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளது சரியல்ல- தணிக்கை வாரிய மண்டல தலைவர் மதியழகன் மெர்சல் பட காட்சகளை நீக்க சொல்வதும் கருத்துரிமைக்கு எதிரானது என்று தற்போது தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது…

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய அஜித் ரசிகர்கள்:
இந்நிலையில் ஜிஎஸ்டி குறித்தான வசனத்தை நீக்க வேண்டாம் எனவும் அப்படி வசனங்கள் நீக்கப்பட்டால் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து டிரென்ட் ஆக்குவோம் என போட்டி போட்டுகொண்டு ஷேர் செய்து வருகின்றனர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment