வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடு!குறிப்பிட்ட தொகைக்கு மேல் டெபாசிட் செய்ய தேவையானவை குறித்து அறிவித்தது மத்திய அரசு…..

Image result for iob bank inside image
வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடு மத்திய அரசு அறிவிப்பு .
 ரூ.50,000க்கும் மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம் . இனி வங்கியில் ரூ.50,000க்கும் மேல் பணத்தை டெபாசிட் செய்வது, புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது, கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  பங்குச்சந்தை முகவர்கள், சீட் நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டு கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும். 

புதிதாக வங்கி கணக்கு தொடங்குவதற்கும், ரூ.50,000க்கும் மேற்பட்ட பணப்பரிமாற்றத்திற்கும் ஆதார் உள்ளிட்ட முக்கிய அடையாள ஆவணங்கள் கட்டாயமாகும். வெளிநாட்டு கரண்சிகள் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிற்கு மேல் ரொக்க பரிமாற்றம் இருந்தால் ஆதாரை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும். மின்னணு முறையில் வெளிநாட்டிற்கு ரூ.5 லட்சத்திற்கும் மேல் பணம் அனுப்புவது மற்றும் பெறுவது, பொருட்கள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது, ரூ.5 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள அசையா சொத்துக்களை வெளிநாட்டில் வாங்குவது ஆகியவற்றிற்கும் இந்த விதிகள் பொருந்தும். இவ்வாறு மத்திய அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு மக்கள் சரியாக பின்பற்றவேண்டும் எனவும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.