ஐஸ்வர்யா ராய் திருப்பதி கோவிலில் மொட்டையடித்தாரா…?

மும்பை: ஐஸ்வர்யா ராய் திருப்பதி கோவிலில் மொட்டையடித்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் திருப்பதி கோவிலுக்கு சென்று மொட்டையடித்துள்ளதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
உண்மையில் ஐஸ்வர்யா ராய் மொட்டையடிக்கவில்லை. முன்பு அவர் கோவிலுக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை மார்பிங் செய்துள்ளனர்.

முன்பும் கூட ஐஸ்வர்யா ராய் பற்றி தவறான செய்தி வெளியாகி வைரலானது. ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டார் என்ற வதந்தி பரவியது.
இந்த மோசமான வாழ்க்கையை வாழ்வதை விட சாவது மேல் என்று அவர் கடைசியாக கூறியதாக வதந்தி பரவியது. கடைசியில் பார்த்தால் பாகிஸ்தானில் இருந்து அந்த வதந்தி கிளம்பியுள்ளது.

Leave a Comment