ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கப்போகுது. காலி பணியிடங்களை நிரப்ப ரெயில்வே முடிவு!

ரெயில்வே துறையில் பாதுகாப்பு பிரிவில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரெயில்வேயில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நேரிட்டதை அடுத்து  விபத்துக்களுக்கு பொறுப்பேற்று  சுரேஷ் பிரபு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதும் பியுஷ் கோயலுக்கு ரெயில்வேதுறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் ரெயில்வே துறையில் பல ஆண்டுகளாக பாதுகாப்பு பிரிவஇல் காலியாக இருக்கம் ஒரு லட்சம் பணி இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்கும் வகையிலும், புதியதொழில்நுட்பங்கள், கருவிகளைப் புகுத்த அதிகமான பணியாட்கள் தேவைப்படுவதையொட்டி இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
ரெயில்வே துறையின் மண்டல மேலாளர்கள், வாரியக் குழு உறுப்பினர்கள் இடையிலான கூட்டம் காணொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.அப்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமான முடிவு என்பது,  ரெயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
 பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையாக இந்திய பெரிய முடிவுக்கு ரெயில்வேஅமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது.
 இதன்படி, ரெயில்வே பாதுகாப்பு பிரிவில் ஜூனியர்  மற்றும் சீனியர் பொறியாளர்கள் நியமித்தல், துணை ரெயில்நிலைய அதிகாரி,பாதுகாவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் 50 சதவீதம் பதவிகள் சி பிரிவில் வருகிறது. இந்த பதவிகள்அனைத்தும் ரெயில்வே வேலைவாய்ப்பு தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்படும். மேலும், குரூப் டி பிரிவில் 50 சதவீதம் ரெயில்வே தேர்வு வாரியம் மூலமும், மற்றவை ரெயில்வே வேலைவாய்ப்பு பிரிவு மூலமும் நிரப்பப்படும் எனச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் வெளிவரும் தைனிக் ஜாக்ரன் நாளேடு வெளியிட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment