“எனது இலக்கு சிறப்பான தமிழகம், முதல்வரை ராஜினாமா கோராதது ஏன் ? எனது குரலுக்கு வலு சேருங்கள்”-கமல்

சென்னை: “எனது இலக்கு சிறப்பான தமிழகம், முதல்வரை ராஜினாமா செய்ய இது வரை எந்த அரசியல் கட்சியினரும் கோராதது ஏன் ? எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்காவது துணிச்சல் இருக்கிறதா என் தமிழக முதல்வரை நேரிடையாக தாக்கி டுவிட் வெளியிட்டுள்ளார். நடிகர் கமலஹாசன் சமீப காலமாக தமிழக அரசை விமர்சித்து வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில் கூறியிருப்பதாவது: ஊழல், துயர சம்பவங்கள் ஏதும் நடந்தால் ஒரு முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என யாரும் கோராதது ஏன்? போதுமான குற்றங்கள் நடந்து விட்டன . எனது இலக்கு சிறப்பான தமிழகம், எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது ? எனது கருத்துக்கு திமுக, அதிமுக உதவ வேண்டும். இல்லையெனில் வேறு கட்சியினரை தேட வேண்டும். சுதந்திரம், ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment