இன வெறிக்கும் புத்தனுக்கும் முடிச்சு போடுவது பகுத்தறிவாகது

By

பௌத்த நாடாக இருப்பதாலேயே அவர்களையெல்லாம் பௌத்திஸ்டுகள் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை…
உலகத்தில் பெரும்பான்மையான மதங்கள் இறைத்தூதர்கள் வழிதான் அறியப்படுகிறது. ஆனால் பௌத்தம் அவ்வாறு கிடையாது. புத்தனே பௌத்த கோட்பாட்டை உருவாக்கியவன். இன்னொன்று வரலாற்று ஆய்வுகளுக்கு வெளிப்படையாக தென்படுபவன் புத்தன். மனித உறவுகளுக்கு பகுத்தறிவுடன் கூடிய விளக்கத்தை கொடுத்தவன் புத்தன். மற்றவை சூழல் கருதி விளக்குவதை தவிர்த்து மீயான்மர் சம்பத்திற்கு வருகிறேன்…..
பல தோழர்கள் மியான்மர் சம்பவத்தை கண்டு மனம் பொறுக்காது பௌத்தத்தை கண்ட மேனிக்கு வசைச்சொற்களால் திட்டி தீர்த்து வருகிறார்கள். முதலில் அவர்களின் அறச்சீற்றம் நியாயமானதே! ஆனால் அது பகுத்தறிவாகாது. உலகத்தில் எந்த மதமும் கொல்ல சொல்லவில்லை என்று வழக்கமான ஆருடம் சொல்வதல்ல என் நோக்கம். இருந்தாலும் புத்தர் உயிர் கொலை கூடாது என்று அழுத்தம் திருத்தமாக உலகிற்கு முதலில் சொன்னவர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்…..
“சாக்கிய குலத்திற்கும் கோலியர் குலத்திற்கும் நடக்கவிருந்த போரை தவிற்கவே நாட்டை விட்டு வெளியேறியவன் புத்தன் என்ற வரலாற்று பார்வையை அழுத்தம் திருத்தமாக மனதில் கொள்ள வேண்டும். ஆம்!… உலகில் நடக்கவிருந்த முதல் இனப்போரை தடுத்தவன் புத்தன். இன்னும் சொல்லப்போனால் அதனாலேயே நாடு, வீடு, மனைவி, பிள்ளைகளை துறந்தவன் புத்தன்.” அதுதான் அவன் வாழ்வின் திருப்புமுனை என்றும் சொல்லலாம். பிறகு உலகை அராய்ந்தான் என்பது தனிக்கதை……
1948 ல் ஆங்கிலேயன் வெளியேறியவுடன் பங்களாதேஷ்லிருந்து ரோகிங்கிய முஸ்லிம்கள் மியான்மர் வந்ததாகவும் 1950 க்குமுன் மியான்மர் வரலாறுகளில் ரோகிங்கியா என்ற குறிப்பு இல்லை என்பதாகவும் பெரும்பான்மை மியான்மர்களில் வாதமாக உள்ளது. அதனடிப்படையிலேயே பல உரிமைகள் ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டது என்று கிடைக்கும் தகவல்கள் சொல்கிறது. ஒரு ஜனநாயக நாடு சிறுபான்மையினரையும் சரிசமமாக நடத்துவதே மனிதநேயம். அதுவும் பௌத்த நாடு இது விடயத்தில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும் என்பதே நமது ஆதங்கம்….
ஆனால், பௌத்த பின்புலம் கொண்ட எந்த நாடும் புத்தனுக்கு விசுவாசமாக இல்லை என்றுதான் நடக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன. மியான்மர் மட்டும் எப்படி அதிலிருந்து தப்பும். புத்தன் உருவானது இந்தியாதான். ஆனால் இந்தியா பௌத்தநாடு அல்ல, இருந்தும் புத்தனின் ஆன்மா இந்தியாவில்தான் உயிரோட்டமாக இருப்பதாக நான் நம்புகிறேன்……
ஜனநாயகத்தின் தேவதை விருதுவாங்கிய புத்தனை வழிபடும் “ஆங் சாங் சூ கீ” இனசுத்திகரிப்பு என்ற மிகமோசமான படுகொலைகளை கண்டு வேடிக்கைப் பார்ப்பது புத்தனில் தவறு அல்ல, மியான்மர் மக்களின் இதயங்கள் அழுகிவிட்டது என்றே காட்டுகிறது.
அதனால்தான் உலகத்திலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனம் ரோகிங்கியா முஸ்லிம் இனம்தான் என்று ஐ.நா சொல்வது ஆயிரம் மடங்கு உண்மை…