டிக் டிக் டிக் : ஜெயம் ரவியின் கடின உழைப்பு

நடிகர் ஜெயம் ரவியின் அர்ப்பணிப்பு தன்னை திகைக்க வைத்ததாக இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
‘மிருதன்’ படத்துக்குப் பிறகு, சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் படம் ‘டிக்:டிக்:டிக்’. முதல் முறையாக தமிழ் சினிமாவில், விண்வெளியில் நடக்கும் த்ரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.
படத்தின் நாயகன் ஜெயம் ரவி பற்றி பேசிய இயக்குநர், “படத்தில் முக்கால்வாசி நேரம் ரவி உடையோடு ஒரு கம்பி மாட்டப்பட்டிருக்கும். இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட, அந்த விசேஷ உடைகளை கழட்டி மாட்ட ஒரு மணி நேரம் ஆகும். கம்பி ஒன்று இணைக்கப்பட்டிருப்பதால், அவரால் உட்கார முடியாது. எப்போதும் நின்று கொண்டே தான் இருக்க வேண்டும். படப்பிடிப்பு மிகவும் கடினமான இருந்தது.
சண்டைக் காட்சிகளை படம்பிடிக்க விசேஷ கருவிகளை இறக்குமதி செய்தோம். சண்டைக்காட்சிகளில் கயிறுகள் பயன்படுத்தும்போது, முன்னால், பின்னால், இடது, வலது என ஏதாவது ஒரு பக்கம் தான் நகர முடியும். இந்த கருவியால் 360டிகிரி கோணத்துக்கு எங்கும் நகரலாம். ஆனால் எங்கள் யாருக்கும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெரியாது.
அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என ஒரு வாரம் படத்தின் சண்டைப் பயிற்சியாளரும் அவரது குழுவும் பயிற்சி எடுத்துக்கொண்டார்கள். ரவிக்கு அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என காட்ட நினைத்தோம்.
அவர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த அந்த கருவியை முயற்சித்துப் பார்க்க வேண்டும் என நினைத்தார். அவர் அதை பயன்படுத்த ஆரம்பித்து, லாவகமாக இருந்ததால், உடனே படப்பிடிப்புத் தயாராகி விட்டார். நாங்கள் அவருடன் ஒரு வாரம் இதற்காக செலவிடலாம் என நினைத்திருந்தோம். அவர் நன்றாக அதைக் கையாண்டார்” என்று கூறினார்.
இந்தப் படத்தில், ஜெயம் ரவியுடன் அவரது மகன் ஆரவ்வும் நடிக்கிறார். இது பற்றி குறிப்பிட்ட சக்தி சவுந்தர்ராஜன் அவர்கள் இருவரும் இருக்கும் காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சைத் தொடும் என்றார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment