பிரமாண்ட படத்தின் இசை !மிகவும் பிரமாண்டமாக , பிரம்மாண்ட ஹோட்டலில் ….

Image result for burj al arab images
மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் படம்  தான் 2.0 .இதன் இசை வெளியிட்டு விழா மிகவும் பிரமாண்டமாக துபாயில் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.   
இதையொட்டி 2.0 படக்குழுவினர் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7 நட்சத்திர ஹோட்டலான பூர்ஜ்- அல் – அரப் செல்கின்றனர்.
அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகின் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.இந்நிகழ்வைத் தொடர்ந்து 2.0 படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி 27ம் தேதி நடைபெறுகிறது
Image result for 2.0 movie dubai images
* 2.0 படத்தின் இசை வெளியீடு பர்ஜ் பார்க்கில் நடைபெறுகிறது. முதன் முறையாக இந்த இடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
* இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
* இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைக்கவுள்ளார்
* சூப்பர் ஸ்டார் ரஜினி – இயக்குநர் ஷங்கர் – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு பாஸ்கோ நடனக்குழு சிறப்பு நடனவிருந்து அளிக்கவுள்ளனர்.
* 12000 பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Image result for 2.0 movie dubai images
* துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட எல்இடி திரை போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒன்றறை லட்சம் பேர் பார்க்கக்கூடும் என்ற கூறப்படுகிறது.
* துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
* துபாயில் முதல் முறையாக இத்தனை பேனர்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் செய்யப்படும் முதல் படம் 2.0 தான்.
 அனைவரும் எதிர்பார்க்கும் படமாக 2.0 உள்ளது .

Leave a Reply

Your email address will not be published.