விரைவில் அதிமுக பா.ஜ.கவில் இணையும் : சிவசேனா எம்.பி. கருத்தால் பரபரப்பு !

அதிமுக விரைவில் பாரதியஜனதா கட்சியுடன் இணையும் என, பாரதியஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா எம்.பி. ஒருவர் கூறி உள்ளார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து உடைந்த அதிமுக, தற்போது அதிகாரப்பூர்வமாக 3 அணிகளாக செயல்பட்டு வருகிறது. மேலும் பல அணிகளும் அவ்வப்போது உருவாகி குரல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதாவுக்கு 3 அணிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தன.
மேலும், ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜிஎஸ்டி, உதய் போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு தற்போதைய தமிழக அரசு கையெழுத்திட்டு, மோடியின் கண்ணசைவுக்கு ஏற்ப இயங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., விரைவில் பா.ஜ., உடன் இணையும்’ என சிவசேனா எம்.பி., ஆனந்த்ராவ் அத்சுல் தெரிவித்தார்.

Leave a Comment