Uncategory
சாப்பிட்டதும் ஐஸ் வாட்டர் குடிப்பது நல்லதா?
ஜில்லென்று தண்ணீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.. இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
ஜில் தண்ணீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக ஜில் தண்ணீரை எடுக்ககூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
