என் வாழ்க்கையே போராட்டம் தான்: கங்கனா ரணாவத்

0
167

இந்தி நடிகை கங்கனா ரணாவத் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ‘மனிகர்னிகா’ படத்தில் நடித்த போது காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இவர் நடிக்கும் மற்றொரு படமான ‘சிம்ரன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
“எனது சினிமா பாதையும், அதன் பயணமும் வித்தியாசமானது. இந்த விழாவுக்கு விமானத்தில் வந்த போது எனக்கு நடந்த பல விஷயங்களை பற்றி மனதில் அசை போட்டுக்கொண்டே வந்தேன். பல கேள்விகள் என்னுள் எழுந்தது. எனது பயணம் அசாதாராணமானது. என் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும் போராட்டக் களமாகவே இருக்கிறது.
நான் எதையும் போராடித்தான் பெற வேண்டியது இருக்கிறது. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அது தான் என் விதி என்று நினைக்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here