திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்ள வேண்டும்: ஹீரோ வலியுறுத்தல்

0
174

மும்பை: திருமணத்திற்கு உறவு வைத்துக் கொள்வதை பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா.
விக்கி டோனார் படம் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா. அவரும், புமி பெட்னேகரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ஷுப் மங்கள் சாவ்தன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
முன்னதாக ஆயுஷ்மான் குரானா பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
உறவு
திருமணத்திற்கு முன்பு உறவு கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். நம் சமூகத்தில் பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணங்களையே ஊக்குவிக்கிறோம்.

திருமணம்
ஒருவரின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தண்ணீருக்குள் குதிப்பதற்கு முன்பு அது எப்படி என்று தெரிந்து கொள்வது நல்லது.

தம்பதி
திருமணத்திற்கு பிறகு பிரச்சனை என்பது தெரிய வந்தால் அந்த தம்பதி என்ன செய்வார்கள்? எங்கள் படத்தில் ஹீரோ, ஹீரோயின் காதலிப்பார்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் எப்பொழுதும் அப்படியே இருக்காது.

கணவன்
ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியாவிட்டால் அவரை அனைவரும் ஏதாவது சொல்வார்கள். அதே ஆணுக்கு பிரச்சனை என்றால் சத்தமில்லாமல் இருந்துவிடுவார்கள். உறவில் செக்ஸும் முக்கியம் என்கிறார் ஆயுஷ்மான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here