உ.பி யோகி அரசால் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு சேலத்தில் நினைவஞ்சலி

By

உ பியில் காவி யோகி அரசு ஆக்ஸிஜன் என்கிற உயிர் சுவாச வாயுக்கு வெறும்₹67 லட்சம் ஒதுக்காமல் 70 சிசுக்களை கொன்று குவித்து விட்டது! பாரத பிரதமரும், முதல்வர் யோகியும் ஒரு அஞ்சலி செய்தி கூட இதுவரை பதிவிடவில்லை.
சிசுவின் உயிர் காக்க நிதி ஒதுக்கீடு செய்யாத காவி யோகி அரசு பசுவுக்கு ₹40 கோடி ஒதுக்கீடு செய்து சிசுக்களை கொன்றதைக் கண்டித்தும்,
மடிந்து போன சிசுக்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தியும்,
நேற்று 14. 8. 17 மாலை 5. 30 மணிக்கு சேலம் மாநகர வடக்கு பகுதி யில் DYFI., AIDWA மற்றும் பாலர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய மௌன அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சேலம் வடக்கு மாநகர சின்னேரி வயல்காடு துவங்கி துரைசாமி நகர் வழியாக சாமிநாதபுரம் வரை இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது!
அஇஜமாதர் சங்க மாநில செயலாளர் கே.ஜோதிலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் என்.பிரவீன்குமார் உள்ளிட்டு 200க்கும் மேற்பட்டோர் கண்ணீர் மல்க நினைவாஞ்சலி செலுத்தினர்.