மத்திய அரசை சரமாரியாக மேடையில் விளாசிய நடிகர்

‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் சுசீந்திரன், இவர் நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா போன்ற நல்ல படங்களை தந்தவர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரை படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ இப்படத்தின் இசைவெலியீட்டு விழா நேற்று நடைபெற்றது இதில் கலந்துகொண்ட நடிகர் அருள் தாஸ் மேடையில் சற்று கோபமாக பேசினார் அவை

” தற்போது எதை பற்றி கருத்து கூறினாலும் ஜாதி பெயரை சொல்கிறார்கள், தற்போது வந்த மெர்சல் விவகாரத்தில் நடிகர் விஷால் பேசியதற்காக அவர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள், ஒழுங்காக வரி கட்டுபவர்கள் பெரும்பாலும் சினிமகாரர்கல்தான் எனவும், அரசியல்வாதிகள் பலரும் தங்களது சொத்து கணக்கை காட்ட மறுக்கின்றனர் எனவும் அவர்கள் வரி கட்டவில்லை எனுவும் குற்றம் கூறினார், மேலும் தற்போதைய அரசியல் பற்றி கருத்து கூறினால் உடனே அவர்களின் மதத்தை பற்றியும் மேலும் அதிகாரத்தை பயன்படுத்தியும் பல தொல்லைகள் கொடுகின்றனர், மேலும் நடிகர் விஜயின் வாக்காளர் அடையாள அட்டையை சமூக வலைத்தளைத்தில் போட்டது கண்டிக்கதக்கது எனவும் கூறினார். மேலும் மெர்சல் திரைப்படத்தில்  உண்மைகள் தான் சொல்லப்பட்டது எனவும் கூறினார்.” இவ்வாறு நடிகர் அருள் தாஸ் கூறினார்.
#பூரா உண்மையவும் சொல்லிபுட்டார் தைரியமான ஆள்தான்        

Leave a Reply

Your email address will not be published.