தாவூத் இப்ராஹிம் சகோதரர் மும்பையில் கைது

மும்பை:
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிம்மின் இளைய சகோதரர் இக்பால் கஷ்கர், நேற்று இரவு (திங்கள்கிழமை) அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
1993-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 260 பொதுமக்கள் பலியாயினர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மிக முக்கிய காரணம் தாவூத் இப்ராஹிம். என்ற நிழல் உலக தாதா என்பது விசாரணையில் தெரிய வந்தது.
அன்று முதல் தாவூத்தை கைது செய்திட இந்தியா முயன்று வருகிறது. அவருக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்நிலையில், தாவூத் இப்ராஹிம்மின் இளைய சகோதரர் இக்பால்கஷ்கர் நேற்றிரவு மும்பைப் பகுதியில் தானே போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மும்பை ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அளித்த மிரட்டல் புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ப்ரதீப் ஷர்மா தலைமையில் அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Leave a Comment