ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைப்பு..!

0
158

ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செப். 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் முதல்வர் பழனிசாமி ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அக்டோபர் 15- ம் தேதி வரை போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here