இலங்கை அணியின் கேப்டன் தரங்கா சதம் அடித்ததின் மூலம் புதிய சாதனை …

Image result for upul tharanga hundred vs pakistan
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையே ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது.இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இலங்கை வீரர் உபுல் தரங்கா புதிய சாதனைப் படைத்துள்ளார்.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரும், அணித் தலைவருமான உபுல் தரங்கா பாகிஸ்தானுடனான ஒருநாள் போட்டியில் 112 ஓட்டங்கள் குவித்தார்.
அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ஒட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் களம்புகுந்த உபுல் தரங்கா நிலைத்து நின்று ஆட்டமிழக்காமல் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் அணியின் ஒட்டுமொத்த ஒட்டங்களில் 59.89 சராசரி என்ற அளவில் தனது பங்களிப்பினை அளித்துள்ளார். இது உலகளவில் இரண்டாவது பெரிய பங்களிப்பாகும்.
இது அவரின் சாதனையாக பார்க்கப்படும் நிலையில் இதற்கு முன்னரே அவர் ஒரு சாதனையை படைத்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான தொடக்க வீரர்கள் பார்ட்னர்ஷிப்பில் ஏழு முறை தனது பங்களிப்பை அளித்ததுதான் அந்த சாதனை.
கடந்த 2006-ஆம் ஆண்டு முன்னாள் வீரர் ஜெயசூர்யாவுடன் அவர் இணைந்து இங்கிலாந்திற்கு எதிராக எடுத்த 286 ஓட்டங்களே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.