ஆதார் !ரயில்வேயையும் விட்டு வைக்கவில்லை…..

                                  Image result for railway
ஆதார் அனைத்துக்கும் தற்போது மத்திய அரசு பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.தற்போது  ரயில்வே துறையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் ஆதாரை அடிப்படையாக கொண்டு பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

                        Image result for aadhar
 ரயில்வே துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பணிக்கு சரியான நேரத்தில் வருகிறார்களா இல்லை விடுப்பில் இருக்கிறார்களா என்ற குழப்பம் பல்வேறு மண்டலங்களில் நிலவி வந்தது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் ேததிக்குள் அனைத்து மண்டலங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஆதாரை அடிப்படையாக கொண்டு பயோமெட்ரிக் வருகைபதிவேடு பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறை அனைத்து மண்டலங்களுக்கும் நவ.3ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. 
                             Image result for railway employee

இந்த கடிதத்தின் அடிப்படையில், கொல்கத்தா ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து மண்டலம் மற்றும் மெட்ரோ, ரயில்வே பட்டறை, அலுவலகம், தயாரிப்பு பிரிவு ஆகிய இடங்களில் இம்மாதம் 30ம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்கள் அதிகாரிகள் பணிக்கு சரியான நேரத்துக்கு வருகிறார்களா என்று கண்காணிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்கத்தா மண்டலத்தை தொடர்ந்து படிப்படியாக அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் பயோமெட்ரிக் முறை அனைத்து இடங்களிலும் அமல்படுத்தப்படும். 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment