தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த வருகிறது நடமாடும் மருத்துவமனைகள்….!

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலால் சுமார்100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இதனால் டெங்குவை கட்டுப்படுத்திட தமிழக அரசு சார்பில் நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை வளசரவாக்கத்தில் இந்த நடமாடும் மருத்துவமனைகளை ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார். இந்த பகுதியில் உள்ள 15 வார்டுகளுக்கும் தனித்தனியாக நடமாடும் மருத்துவமனைகள் மற்றும் கொசு மருந்து அடிக்க பயன்படும் இயந்திரங்கள் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். மேலும் டெங்கு அறிகுறிகள் உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவமனை முகாம்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.