சீன ராணுவம் இந்தியாவை எச்சரிக்கை செய்துள்ளது!!

0
117

இந்தியா – சீனா – பூட்டான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில், சாலை அமைக்க, சீனா முயன்றது; இதற்கு, நம் படைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பணிகளை நிறுத்தின. அதை தொடர்ந்து, சிக்கிம் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இரு நாட்டு படைகளும், அங்கு குவிக்கப்பட்டன. இரு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த, எல்லை பிரச்னைக்கு, சுமுக தீர்வு காணும் வகையில், இரு நாடுகளும், படைகளை திரும்பப் பெறுவதென, முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், சீன ராணுவத்தின் மூத்த அதிகாரி வியூ குயான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவுடன் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, சீன ராணுவம் எப்போதும் போல், தனது எல்லை மற்றும் இறையாண்மையை தொடர்ந்து விழிப்புடன் கண்காணிக்கும். டோக்லாம் பிரச்னையிலிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன். ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, சீனாவுடன் இணைந்து செயலாற்றி எல்லையில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவ இந்தியா ஒத்துழைக்க வேண்டும். இரு நாட்டு ராணுவம் உறவு வலுப்பெறுவதை ஊக்கப்படுத்த வேண்டும். என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here