சிபிஎம் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் பிஜேபி ஏன்..? எதற்காக…?

பிஜேபியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா கேரளாவில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கூறி அக்கட்சியின் மாநில குழு சார்பில் “ஜனரக்ஷன்” என்னும் பெயரில் பேரணியை நடத்தினார்கள்.

அப்போது கேரளா மக்கள் அமித்ஷாவை”அல்லாவதிஷாஜி” அதாவது “அருவருப்பானவன்” என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டனர். மேலும் பேரணிக்கு கேரளா மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் தனது பேரணியை பாதியிலே விட்டுவிட்டு டெல்லி புறப்பட்டார் அமித்ஷா .

இதனையடுத்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்  கட்சி(சிபிஎம்) அலுவலகத்தை பிஜேபி கட்சி முற்றுகையிட வேண்டும் என்று அரைகூவல் விடுத்தார்.இதையடுத்து கேரளாவில் உள்ள விசாகப்பட்டினம் சிபிஎம் மாநில குழு அலுவலகம், டெல்லியில் உள்ள சிபிஎம் கட்சியின் மத்திய குழு அலுவலகம்,தெலுங்கானாவிலுள்ள அலுவலகம்,பாண்டிச்சேரியில் உள்ள அலுவலகம்,டேராடுன் உள்ள அலுவலகம் எனத் தொடங்கியது பிஜேபியின் முற்றுகை பயணம்..

ஏன்…?   எதற்க்காக….?
ஏனெனில் பிஜேபி கட்சியின் வலிமைவாய்ந்த கொள்கை மற்றும் செயல்பாட்டு எதிரியாக சிபிஎம் கட்சி உருவெடுத்துள்ளதாளா…?

தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மாநில குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்க முயற்சித்த பாஜக/ஆர்எஸ்எஸ் தொண்டர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.அப்போது சிபிஎம் தொண்டர்களும் அணிதிரண்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment