குலசை முத்தாரம்மன் கோவில் ஆடி கொடை விழா பக்த்தர்கள் கூட்டம் அலை மோதியது

குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கொடை விழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா நேற்று முன்தினம் இரவில் மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து வில்லிசை நடந்தது. விழாவின் சிகர நாளான நேற்று ஆடி கொடை விழா நடந்தது. காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு மகுடம், கும்பம் திருவீதி எழுந்தருளல், வில்லிசை நடந்தது.
மாலை, இரவில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் வில்லிசை, சிறப்பு அலங்கார தீபாராதனை, கும்பம் திருவீதி எழுந்தருளல் நடந்தது. மதியம், இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இன்று, மஞ்சள் நீராட்டு விழா

விழாவின் நிறைவு நாளான இன்று (புதன்கிழமை) காலையில் சிறப்பு மகுடம், கும்பம் திருவீதி எழுந்தருளல், வில்லிசை நடக்கிறது. மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், தக்காரும் உதவி ஆணையருமான அன்னக்கொடி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment