சிங்கப்பூரின் இடைக்கால அதிபராக தமிழர் நியமனம்

சிங்கப்பூரில், அதிபரின் ஆலோசனை குழு தலைவர் பதவி வகித்த தமிழர் ஜே.ஓய்.பிள்ளை அந்நாட்டின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள வரும் 23 ஆம் தேதி வரையிலோ, அல்லது வேட்பு மனுத்தாக்கல் தேதியான 13 ஆம் தேதி போட்டியின்றி அதிபர் தேர்வு செய்யப்படும் வரையிலோ இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசமைப்பு சட்டத்தின்படி அதிபரின் ஆலோசனை குழு தலைவர் பதவி வகிப்பவர்கள், அதிபர் தேர்தல் நடக்கும் வேளைகளில் இடைக்கால அதிபராக நியமிக்க விதி வகுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment