“மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது” – பிரதமர் மோடி உரை!!

இந்தியாவின்  71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி உரையாற்றினார்.அப்போது இந்தியா சுதந்திரம் பெற பாடுபட்ட, தியாகம் செய்வர்களை இந்நாளில் நினைவு கூர்வோம் என தெரிவித்தார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 வது ஆண்டு விழாவை இந்தியா கொண்டாடி வருகிறது என்றும் இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம் என்றும் கூறினார்.
புதிய இந்தியாவை உருவாக்க இளைஞர்களை வரவேற்கிறேன். மனதில் நம்பிக்கை விதைத்தால் நினைத்த செயலை செய்து முடிக்க முடியும். 2022க்குள் புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதி மொழியேற்போம் என்று மோடி கூறினார்.
நாட்டில் ஜி.எஸ்.டி., பெரும் வெற்றியை பெற்றுள்ளது என்றும் ஆதார் அட்டையால் ஊழல் ஒழியும்  என்றும் மோடி கூறினார்.
மதத்தின் பெயரிலான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. புதிய திசையை நோக்கி நாட்டை வழிநடத்தி வருகிறோம்.
காஷ்மீர் மாநிலம் மீண்டும் சொர்க்க பூமியாக மாற்றப்படும் என்று தெரிவித்த மோடி,  ராணுவ வீரர்களின் சாதனைகளை தெரியப்படுத்த புதிய இணையதளம் உருவாக்கப்படும். என்றும் மோடி தெரிவித்தார்.
இந்த விழாவில் பாஜக  மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் இங்கு நடக்கும் மதக்கலவரங்கள் பெரும்பாலும் RSS,VHP,பச்ரங்க தளம்,பிஜேபி தலைமையிலும் நடந்தது,நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan

Leave a Comment