முதன் முறையாக விழ்ந்த ஆஸ்திரேலியா:வங்கதேசம் வரலாற்று வெற்றி!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 260 ரன்களும்,  ஆஸ்திரேலியா அணி 217 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணி 221 ரங்களுக்கு ஆட்டமிழந்தது. 
இதனையடுத்து 265 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு 2-வது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி  3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 4-ம் நாள்  ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணியின் வார்னர் சத்தம் அடித்து அசத்தினார்.
இதனையடுத்து வந்த வீரர்கள் சாகிப் அல்  ஹசனின் சூழலில் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுக்க.  ஆஸி. அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸி. அணிக்கு எதிராக முதன் முறையாக வெற்றி பெற்று வங்கதேச அணி சாதனை படைத்துள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment